/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாளை மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
நாளை மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : பிப் 01, 2025 12:46 AM
நாளை மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
நாமக்கல்: பெரியூர் மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை கோலாகலமாக நடக்கிறது.நாமக்கல் மாநகராட்சி, பெரியூரில் பிரசித்திபெற்ற மருத காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கொங்கு வேளாளர் சமூகத்தின் பண்ணை குலம், துாரன் குலத்தாருக்கு பாத்தியப்பட்ட கோவிலாகும். 28 ஆண்டுகளுக்கு பின், தற்போது பிரமாண்டமாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கோவிலில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ள, 5 நிலை கொண்ட ராஜகோபுரம், முன்புறம் பிரமாண்டமான கொடிக்கம்பம், அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய சுற்றுச்சுவர், ஆகம விதிமுறைப்படி கர்ப்பகிரகத்தின் மேல் தங்க முலாம் பூசப்பட்ட கோபுரம் போன்ற சிறப்பம்சங்களுடன் பணிகள் முடிவடைந்துள்ளன. அதை தொடர்ந்து, கும்பாபிஷேக விழா, கடந்த, 27ல் துவங்கியது. நேற்று முன்தினம், தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இதில், தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன்,
எம்.எல்.ஏ., ராமலிங்கம், கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேற்று காலை, 8:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, 9:00 மணிக்கு, புதிய விக்ரஹங்களுக்கு கண் திறத்தல், விமான, ராஜகோபுர கலச ஸ்தாபனம், மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை. இரவு, 9:00 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நாளை காலை, 8:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, மாலை, 5:00 மணிக்கு, ஐந்தாம் கால யாக பூஜை, இரவு, 7:00 மணிக்கு லட்சுமி பூஜை நடக்கிறது.
பிப்., 2 அதிகாலை, 4:30 மணிக்கு, ஆறாம் கால யாக பூஜை, 9:30 மணிக்கு, மருதகாளியம்மன் நுாதன தங்க விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு குடமுழுக்கு விழா, வலம்புரி விநாயகர், கருப்பண்ண சுவாமி, காத்தவராயன், மதுரைவீரன், கன்னிமூல
கணபதி, கன்னிமார் சுவாமிகள் உள்ளிட்ட பரிவார மூர்த்தி களுக்கு கோபுர குடமுழுக்கு விழாவும், 9:45 மணிக்கு, மருதகாளியம்மன் மூலஸ்தான குடமுழுக்கு விழாவும் கோலாகலமாக நடக்க உள்ளது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
இதில், பேரூராதீனம், 25ம் குருமகா சந்நிதானங்கள் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், குலகுரு சிவஸ்ரீ சிதம்பரம் குருக்கள், தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள் திருநாவுக்கரசு, பழனிவேலு, ராமசாமி, குமாரசாமி, திருப்பணி குழு தலைவர் பாலசுப்ரமணியன் மற்றும் பண்ணை குலம், துாரன் குலம் குடிப்பாட்டு மக்கள் செய்துள்ளனர்.