/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அதிகாரிகளை கண்டித்து நுாதன போராட்டம்
/
அதிகாரிகளை கண்டித்து நுாதன போராட்டம்
ADDED : பிப் 05, 2025 01:10 AM
அதிகாரிகளை கண்டித்து நுாதன போராட்டம்
எலச்சிபாளையம் : எலச்சிபாளையம் யூனியன், பெரியமணலி பஞ்., புதுவலவு பகுதியில், கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் போர்வெல் அமைத்து அடிபம்ப் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. நான்கு மாதங்களுக்கு முன், அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பொக்லைன் இயந்திரம் மூலம் அடிபம்பை இடித்து தரைமட்டமாக்கினார். இதுகுறித்து அதிகாரிகளிடம் மக்கள் முறையிட்டனர். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று மா.கம்யூ., சார்பில், பெரியமணலி பஞ்சாயத்து அலுவலகம் முன், 'மக்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல், நான்கு மாதமாக காலம் தாழ்த்தி வரும் அதிகாரிகளை பாராட்டி மலர்கொத்து கொடுத்து, வாழ்த்தும் நுாதன போராட்டம்' நடந்தது.