/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : பிப் 05, 2025 01:11 AM
பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
நாமக்கல் : நாமக்கல், சின்னவேப்பநத்தம் கிராமத்தில் ராஜகணபதி, பாலமுருகன், பகவதி அம்மன், நவக்கிரகம், முனீஸ்வரர் கோவில் புதிதாக கட்டப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக, காவிரியாற்றிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மேலும், பக்தர்கள் கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நான்கு கால யாக பூஜை முடிந்து, மகா கும்பாபிஷேக விழா நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், பட்டி மன்றம், நடன நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருப்பணி குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.