/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் கோவிலில்தை வெள்ளி சிறப்பு பூஜை
/
மாரியம்மன் கோவிலில்தை வெள்ளி சிறப்பு பூஜை
ADDED : பிப் 08, 2025 12:45 AM
மாரியம்மன் கோவிலில்தை வெள்ளி சிறப்பு பூஜை
நாமகிரிப்பேட்டை, : தை கடைசி வெள்ளியையொட்டி, ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்களில் காலை முதல் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.
நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் ஆன்மிக மகளிர் குழு சார்பில், தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. 150க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து, நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்தனர்.
பின், அபிஷேகம், ஆராதனை நடந்தது. வெள்ளி கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக பக்தர்களுக்கு கூழ் ஊற்றப்பட்டது.
இதேபோல், அரியாகவுண்டம்பட்டி கருப்பனார் கோவில், ஆர்.புதுப்பட்டி துலக்கசூடாமணி மாரியம்மன் கோவில், மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில், திம்மநாயக்கன்பட்டி ஓம் சக்தி முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.