/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கே.எஸ்.ஆர்., பொறியியல்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
கே.எஸ்.ஆர்., பொறியியல்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
கே.எஸ்.ஆர்., பொறியியல்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
கே.எஸ்.ஆர்., பொறியியல்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : பிப் 13, 2025 01:35 AM
கே.எஸ்.ஆர்., பொறியியல்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
திருச்செங்கோடு :திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில், 19வது பட்டமளிப்பு விழா நடந்தது. சேர்மன் சீனிவாசன் துவக்கி வைத்தார். பி.எம்.டபிள்யூ., குரூப் ஆப் இந்தியா கிளையின் வேலைவாய்ப்பு பிரிவு இயக்குனர் சங்கர் சுந்தரலிங்கம், தரவரிசை பெற்ற மாணவ, மாணவியருக்கு தங்கப்பதக்கம், 640 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கி பாராட்டினார். அப்போது, ''மாணவர்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அணுகும் முறை, அடிப்படை நாகரிகம், பொது அறிவு என்ற, மூன்று மந்திரங்களை கடைபிடியுங்கள்,'' என கேட்டுக்கொண்டார்.
கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், உறுதிமொழி வாசிக்க, மாணவ, மாணவியர் உறுதிமொழியை ஏற்றனர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக
இயக்குனர் மோகன், கல்லுாரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் பெரியசாமி, இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்தி பேசினர்.