/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 15, 2025 01:53 AM
அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆகியவை சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல், டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அகில இந்திய சம்மேளன உதவி பொதுச்செயலாளர் ரேவதி தலைமை வகித்தார். கோட்ட செயலாளர்கள் துரைசாமி, சிவக்குமார், கமல்ராஜ், தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை, மத்திய அரசு கைவிட வேண்டும். 8-வது ஊதியக்குழு அடிப்படையில், அலுவலர்கள், பணியாளர்களின் ஊதியத்தை சீரமைக்க வேண்டும். மருத்துவ காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை அனைத்து அஞ்சலக ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அஞ்சலக ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.