/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குழந்தைகள் அறிவியல் மாநாட்டில்குமாரபாளையம் மாணவர்கள் சாதனை
/
குழந்தைகள் அறிவியல் மாநாட்டில்குமாரபாளையம் மாணவர்கள் சாதனை
குழந்தைகள் அறிவியல் மாநாட்டில்குமாரபாளையம் மாணவர்கள் சாதனை
குழந்தைகள் அறிவியல் மாநாட்டில்குமாரபாளையம் மாணவர்கள் சாதனை
ADDED : பிப் 18, 2025 01:32 AM
குமாரபாளையம்:கோவையில் நடந்த, 32வது குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில், 'நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை' என்ற தலைப்பில், 15,567 குழு மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில், குமாரபாளையம் மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைப்பள்ளி சார்பில், 23 குழு மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில், ஐந்து குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட அளவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டனர். அவர்களில், நான்கு குழுக்கள் வெற்றி பெற்று, மேற்கு மண்டல அளவில் நடந்த போட்டிக்கு சென்றனர்.
அதில் ஒரு குழு வெற்றி பெற்று, புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லுாரியில், கடந்த, 15, 16ல் நடந்த மாநில போட்டியில் கலந்து கொண்டனர். இதில், குமாரபாளையம் மேற்கு காலனி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மகத்ராஜ், மெதுன்ஷாந்த் குழு வெற்றி பெற்றது.
அவர்களுக்கு, இஸ்ரோ விஞ்ஞானி இந்திரசால், பரிசு, கேடயம் வழங்கினார். பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவர்களையும், ஆசிரியர்களையும், தலைமை ஆசிரியர் கவுசல்யா மணி பாராட்டினார்.

