/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நிழற்கூடம் அமைக்கும் பணிவிரைந்து முடிக்க கோரிக்கை
/
நிழற்கூடம் அமைக்கும் பணிவிரைந்து முடிக்க கோரிக்கை
நிழற்கூடம் அமைக்கும் பணிவிரைந்து முடிக்க கோரிக்கை
நிழற்கூடம் அமைக்கும் பணிவிரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : பிப் 18, 2025 01:33 AM
சேந்தமங்கலம்:கொல்லிமலை கொண்டை ஊசி வளைவு பகுதியில் நடைபெற்று வரும் நிழற்கூடம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொல்லிமலைக்கு செல்ல, காரவள்ளியில் இருந்து, 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில், மூன்று கொண்டை ஊசி வளைவுகளில், சில ஆண்டுகளுக்கு முன் நிழற்கூடம் கட்டப்பட்டது. இந்த நிழற்கூடத்தை பஸ் பயணிகள் மட்டுமின்றி, மழை, வெயில் காலங்களில் டூவீலர்களில் செல்வோர் பயன்படுத்தி வருகின்றனர். நிழற்கூடம் இல்லாத நீண்ட துார கொண்டை ஊசி வளைவு பகுதியில், திடீரென மழை வந்தால், டூவீலர்களில் செல்வோர் ஒதுங்க இடமின்றி அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக, 6, 31, 43 உள்ளிட்ட, ஐந்து கொண்டை ஊசி வளைவுகளில், சில மாதத்திற்கு முன் புதிதாக நிழற்கூடம் கட்டும் பணி நடந்தது. ஆனால், இப்பணி கடந்த, மூன்று மாதமாக நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, நிறுத்தப்பட்ட பணியை, நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

