/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'மும்மொழி கல்வி கொள்கைக்குபெற்றோர் ஆதரவாக உள்ளனர்'
/
'மும்மொழி கல்வி கொள்கைக்குபெற்றோர் ஆதரவாக உள்ளனர்'
'மும்மொழி கல்வி கொள்கைக்குபெற்றோர் ஆதரவாக உள்ளனர்'
'மும்மொழி கல்வி கொள்கைக்குபெற்றோர் ஆதரவாக உள்ளனர்'
ADDED : மார் 07, 2025 02:45 AM
'மும்மொழி கல்வி கொள்கைக்குபெற்றோர் ஆதரவாக உள்ளனர்'
நாமக்கல்:-மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை மற்றும் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக, நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், நாமக்கல் காந்தி சிலை அருகில் கையெழுத்து இயக்க துவக்க விழா நடந்தது. மாவட்ட தலைவர்
சரவணன் தலைமை வகித்தார். நகர தலைவர் தினேஷ் முன்னிலை வகித்தார். பா.ஜ., மாநில துணைத்தலைவரும், மாவட்ட பொறுப்பாளருமான துரைசாமி கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து, மும்மொழி கல்வி கொள்கை பிரசார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம், பிரஞ்சு, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழி பாடங்கள் உள்ளன. இந்த வாய்ப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு இல்லை. இதைத்தான் மத்திய அரசு மூன்றாவது மொழியை அனைத்து அரசு பள்ளிகளிலும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த பிரச்னையை திசை திருப்பவே தமிழக முதல்வர் தொகுதி சீரமைப்பு குறித்து பேசி வருகிறார்.