ADDED : மார் 09, 2025 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு பள்ளியில் ஆண்டு விழா
எலச்சிபாளையம்:எலச்சிபாளையம் யூனியன், மாணிக்கம்பாளையம் மேட்டுபுதுார் அரசு தொடக்கப்பள்ளியில், நேற்று முன்தினம் ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் பழனியப்பன் தலைமை வகித்தார். நல்லாசிரியர் விருதுபெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர் கணேசன் கலந்துகொண்டார். இதில், பள்ளியில் பயிலும், 84 மாணவர்கள் திரைப்பட, பக்தி பாடல்களுக்கு நடனமாடுதல், நாடகம் நடத்தல், திருக்குறள்கள் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தி அசத்தினர். மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகாலிங்கம், ஆசிரியர் பயிற்றுநர் முத்துக்குமார், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கோமதி, பி.டி.ஓ., தலைவர் செந்தில், மாணிக்கம்பாளையம் அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியைகள் உள்பட, 1,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.