/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா
/
கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா
ADDED : மார் 14, 2025 02:04 AM
கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா
மோகனுாார்:மோகனுாரில், கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.மோகனுார் பேரூராட்சிக்கு உட்பட்ட சமுதாய கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, எம்.எல்.ஏ., ராமலிங்கம் தலைமை வகித்தார். மோகனுார் மருத்துவ அலுவலர் டாக்டர் பரமேஸ்வரி, கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள் குறித்தும், தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்தும், கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார்,
நுாற்றுக்கணக்கான பெண்கள் சமுதாய வளைகாப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர். அனைவருக்கும், வளையல் அணிவித்து மஞ்சள், குங்குமம், தாம்பூலம் அடங்கிய சீர்வரிசை பொருட்கள், உணவுகள் வழங்கப்பட்டன.
மாவட்ட சமூக நல அலுவலர் காயத்ரி, மாவட்ட திட்ட அலுவலர் (பொ) சசிகலா, எருமப்பட்டி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஆனந்தம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக பணியாளர் பன்னீர்செல்வம், பேரூராட்சி துணைத் தலைவர் சரவணகுமார், கண்காணிப்பாளர் சுகுணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.