/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி
/
அரசு பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி
ADDED : மார் 15, 2025 02:50 AM
அரசு பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி
குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, வேமன் காட்டுவலசு அரசு உயர்நிலை பள்ளியில், 'தமிழ் கூடல்' நிகழ்ச்சி, தலைமை ஆசிரியை செல்வி தலைமையில் நடந்தது. மேலாண்மை குழு தலைவர் அஜந்தா, பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் அம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 6 முதல், 9 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, பாட்டு போட்டி, கவிதை எழுதுதல் போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு நினைவு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. பி.டி.ஏ., தலைவர் காந்தி நாச்சிமுத்து, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் லட்சுமி காமாட்சி ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். விழாவில், ஆசிரியர்கள் குமார், தங்கராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.