/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல், பரமத்தியில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
நாமக்கல், பரமத்தியில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நாமக்கல், பரமத்தியில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நாமக்கல், பரமத்தியில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : மார் 20, 2025 01:39 AM
நாமக்கல், பரமத்தியில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நாமக்கல்:'நாமக்கல், பரமத்தியில், நாளை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாதம் தோறும் நடத்தப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகள் கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றனர். அதன்படி, நாளை காலை, 11:00 மணிக்கு, நாமக்கல், திருச்செங்கோடு தாலுகாவில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
நாமக்கல் பி.டி.ஓ., அலுவலகத்திலும், பரமத்தி பி.டி.ஓ., அலுவலகத்திலும், வருவாய் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. நாமக்கல் ஆர்.டி.ஓ., சாந்தி, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் இடுபொருட்கள் இருப்பு விபரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.