தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ உயரமான இடத்தில் நிழற்கூடம்: கணவாய்மேடு பயணிகள் அவதி

உயரமான இடத்தில் நிழற்கூடம்: கணவாய்மேடு பயணிகள் அவதி

உயரமான இடத்தில் நிழற்கூடம்: கணவாய்மேடு பயணிகள் அவதி


ADDED : மார் 21, 2025 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2025 01:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உயரமான இடத்தில் நிழற்கூடம்: கணவாய்மேடு பயணிகள் அவதி

ராசிபுரம்:பேளுக்குறிச்சி கணவாய்மேடு பகுதியில், உயரமான இடத்தில் நிழற்கூடம் உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

ராசிபுரம் - மோகனுார் தொழிற்வடச்சாலை அமைக்கும்போது, சாலைகள் விரிவுபடுத்தப்பட்டது. இதனால், மேடான பகுதிகளில் பல இடங்களில் சாலையை தாழ்வாக அமைத்துள்ளனர். பேளுக்குறிச்சி அடுத்த கணவாய்மேட்டில், 10 அடி உயரத்திற்கு தாழ்வாக சாலை அமைத்துள்ளனர். இதனால், கணவாய்மேடு பஸ் நிறுத்த பழைய நிழற்கூடம் மிக உயரமான இடத்திற்கு சென்றுவிட்டது.

ராசிபுரத்திற்கு செல்லும் பயணிகளுக்கு புதிய நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாமக்கல் செல்லும் பயணிகள் காத்திருக்க நிழற்கூடம் இல்லை. உயரமான இடத்தில் சென்று வயதான பெண்கள், முதியவர்கள் காத்திருக்க முடிவதில்லை. இதனால், கோடைகாலமான தற்போது வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, நாமக்கல் செல்லும் பயணிகளுக்கும் பயன்படும் வகையில், கணவாய்மேடு பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us