தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ காப்புரிமையின்றி பாடல் ஒளிபரப்பு'டிவி' சேனல் உரிமையாளர் கைது

காப்புரிமையின்றி பாடல் ஒளிபரப்பு'டிவி' சேனல் உரிமையாளர் கைது

காப்புரிமையின்றி பாடல் ஒளிபரப்பு'டிவி' சேனல் உரிமையாளர் கைது


ADDED : மார் 30, 2025 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2025 01:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காப்புரிமையின்றி பாடல் ஒளிபரப்பு'டிவி' சேனல் உரிமையாளர் கைது

நாமக்கல்:காப்புரிமை பெறாமல் சினிமா பாடலை ஒளிபரப்பிய, நாமக்கல், கிங் 'டிவி' சேனல் உரிமையாளரை, சேலம் அறிவுசார் சொத்துரிமை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட ஆர்.பி.புதுாரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் எழிலரசு, 47. இவர், கிங் 'டிவி' 24 மணி நேர சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில், 2024 அக்., 4 மாலை, 5:28 மணிக்கு, 'அழகிய தமிழ் மகன்' என்ற திரைப்படத்தில் இருந்து, 'வளையப்பட்டி தவிலே' என்ற பாடலை காப்புரிமை பெறாமல் ஒளிபரப்பி உள்ளார்.

இதுகுறித்து, சென்னை வளசரவாக்கம், ஜானகி நகரை சேர்ந்த ஜே.வி.கே.டி.எஸ்., என்டர்பிரைசஸ் நிறுவன மேலாளர் குமார், 50, சேலம் அறிவுசார் சொத்துரிமை போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார்.

புகார்படி வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை, நாமக்கல், கிங் 'டிவி' நிறுவனத்துக்கு வந்த சேலம் அறிவுசார் சொத்துரிமை போலீசார், எழிலரசை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us