/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விபத்தை தடுக்க வேகத்தடைமீது வண்ணம் பூச வேண்டும்
/
விபத்தை தடுக்க வேகத்தடைமீது வண்ணம் பூச வேண்டும்
ADDED : ஏப் 11, 2025 01:43 AM
விபத்தை தடுக்க வேகத்தடைமீது வண்ணம் பூச வேண்டும்
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., சாலை வழித்தடத்தில், குட்டைமுக்கு பகுதியில் உள்ள வேகத்தடை மீது வண்ணம் பூசப்படாததால், இரவு நேரத்தில் விபத்து ஏற்படுகிறது.
பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., சாலை வழித்தடத்தில் குட்டைமுக்கு பகுதியில் கொண்டை ஊசி வளைவில் வேகத்தடை உள்ளது. பகல் நேரத்தில் வேகத்தடை இருப்பது, தொலைவில் வரும் போதே வாகன ஓட்டிகளுக்கு தெரியும். இதனால் மெதுவாக, எச்சரிக்கையாக வந்து விடுகின்றனர். இரவு நேரத்தில் வேகத்தடை இருப்பது தெரிவதில்லை, அருகில் வரும் போது தெரிவதால், திணறுகின்றனர். கவனக்
குறைவாக வந்தால், வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுவதற்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக டூவீலரில் வரும் வயதானவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில், வேகத்தடைக்கு வண்ணம் பூசி, இரவில் ஒளிரும் விளக்கு, எச்சரிக்கை பலகை வைக்க, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.