/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சித்த மருத்துவருக்கு 'லிப்ட்' கொடுத்துமிரட்டி ரூ.1 லட்சம், 2.5 பவுன் பறிப்பு

ADDED : மார் 01, 2025 01:38 AM
சித்த மருத்துவருக்கு 'லிப்ட்' கொடுத்துமிரட்டி ரூ.1 லட்சம், 2.5 பவுன் பறிப்பு
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினம், 31. இவர், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
கடந்த, 26ல், சேலத்தில் உள்ள உறவினரின் திருமணத்தில் பங்கேற்க சென்றார். அங்கிருந்து, மகா சிவராத்திரியையொட்டி, நாமக்கல் சித்தர் மலைக்கு செல்ல, நாமக்கல் அரசு மருத்துவமனை முன் பஸ்சுக்கு காத்திருந்தார்.
அப்போது டூவீலரில் வந்த, 25 வயது மதிக்கத்தக்க நபரிடம், 'லிப்ட்' கேட்டுள்ளார். அவர், கொங்கு நகர் அருகே ரயில்வே பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு நின்று கொண்டிருந்த, நான்கு பேர் கத்தியை காட்டி மிரட்டி, சித்த மருத்தவர் ரத்தினத்தை தாக்கி மொபைல் போனை பறித்தனர். தொடர்ந்து, அவரது, 'ஜிபே' கணக்கில் இருந்து, ஒரு லட்சம் ரூபாயை அவர்களது வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொண்டனர். மேலும், டாக்டர் ரத்தினம் கையில் அணிந்திருந்த, இரண்டரை பவுன் தங்க காப்பையும் பறித்துக்கொண்டு, 'வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம்' என, மிரட்டி விட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து புகார், நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.