/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குளிர்பான ஆலையில் அதிகாரிகள் சோதனை
/
குளிர்பான ஆலையில் அதிகாரிகள் சோதனை
ADDED : ஆக 13, 2024 06:22 AM
ராசிபுரம்: திருவண்ணாமலை மாவட்டம், வெண்பாக்கம் அடுத்துள்ள கனி-கிலுப்பை கிராமத்தை சேர்ந்த, 5 வயது சிறுமி. இவர் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அப்பகுதியில் உள்ள கடையில் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் சிறுமி இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
சிறுமி குடித்த குளிர்பானம் தயாரித்த நிறுவனத்தின் கிளை, ராசி-புரம் அடுத்த ஏ.கே.சமுத்திரத்தில் உள்ளது. இதனால், நேற்று மாலை, நாமக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி முருகன் தலைமையில் அதிகாரிகள் குளிர்பான ஆலையில் சோதனையிட்-டனர்.
சோதனை இரவு, 10:00 மணிக்கு நிறைவடைந்தது. அங்கு தயா-ரிக்கப்படும் குளிர்பானம், அதற்கான மூலப்பொருட்கள் உள்ளிட்-டவற்றை ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

