/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?
/
பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?
ADDED : ஆக 23, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலச்சிபாளையம்: மானத்தி, அரசு தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எலச்சிபாளையம் ஒன்றியம், மானத்தி கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன், அரசு தொடக்கபள்ளி கட்டப்பட்டது. சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது.
இதனால், திருடர்கள் எளிதில் பள்ளிக்குள் புகுந்து பள்ளிக்குள் இருக்கும் கணினி, தளவாடப்பொருட்கள் மற்றும் பல்வேறு கல்வி உபகரணங்களை திருடிச்செல்ல வாய்ப்புள்ளது. எனவே, பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.