ADDED : ஆக 25, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இலவச கண்
சிகிச்சை முகாம்
நாமக்கல், ஆக. 25-
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், கண்ணுார்பட்டி ஹரிநந்தன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. தாளாளர் சுந்தர் தலைமை வகித்தார். தாத்தையங்கார்பட்டி பஞ்., தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் கோபிநாத் முகாமை துவக்கி வைத்தார்.
மருத்துவர் குழுவினர், கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரை இலவமாக வழங்கினார். அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். ஜேசீஸ் நிர்வாகிகள் மாதேஷ்வரன், சதீஷ்குமார், பயிற்சியாளர் தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

