/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வரத்து குறைவால்மஞ்சள் ஏலம் ரத்து
/
வரத்து குறைவால்மஞ்சள் ஏலம் ரத்து
ADDED : ஜன 22, 2025 01:23 AM
வரத்து குறைவால்மஞ்சள் ஏலம் ரத்து
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ்.,சில் வாரந்தோறும் மஞ்சள் ஏலம் நடத்தப்படு கிறது. ஈரோட்டிற்கு அடுத்த பெரிய மஞ்சள் மார்க்கெட், நாமகிரிப்பேட்டையில் உள்ளது. 17 தனியார் மண்டிகள், ஆர்.சி.எம்.எஸ் ஆகியவை மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை குறைந்தபட்சம், 50 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகும். கடந்த வாரம், பொங்கல் பண்டிகை என்பதால் மஞ்சள் ஏலம் நடக்கவில்லை. ஜன., 7ல் கடைசியாக நடந்த ஏலத்தில், 358 மூட்டை மஞ்சள் விற்பனைக்கு வந்திருந்தது. 19 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, மஞ்சள் சீசன் முடிந்துவிட்டது. இருப்பு மஞ்சள் மட்டுமே விற்பனையாகி வருகிறது. எனவே, நேற்று வரத்து மிகவும் குறைவாக இருந்ததால், ஆர்.சி.எம்.எஸ்., உள்பட தனியார் மண்டிகளிலும் மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது.