/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓடை ஆக்கிரமிப்புஅதிகாரிகள் அலட்சியம்
/
ஓடை ஆக்கிரமிப்புஅதிகாரிகள் அலட்சியம்
ADDED : ஜன 30, 2025 01:47 AM
ஓடை ஆக்கிரமிப்புஅதிகாரிகள் அலட்சியம்
பள்ளிப்பாளையம்,:பள்ளிப்பாளையம் அருகே, களியனுார் அடுத்த கட்டிப்பாளையம் பகுதி விவசாயம் நிறைந்தவை. இப்பகுதியில் செல்லும் ஓடை, கடந்த காலங்களில், 80 அடி அகலத்திற்கு இருந்தது. தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக, 10 முதல், 20 அடியாக சுருங்கி காணப்படுகிறது. அந்தளவுக்கு வாய்க்கால் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. பாசனத்திற்கு வாய்க்காலில் தண்ணீர் திறக்கும்போது, இந்த ஓடையிலும் தண்ணீர் செல்லும். ஆக்கிரமிப்பால், வயலின் கடைமடை வரை தண்ணீர் செல்ல தடை ஏற்படுகிறது. இந்த ஓடை ஆக்கிரமிப்பு குறித்து, அதிகாரிகளிடமும், கிராம சபை கூட்டத்திலும் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரி கள் அலட்சியமாக உள்ளனர்.

