/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.கோட்டில் சுப்ரமணியர் திருத்தேர் வெள்ளோட்டம்
/
தி.கோட்டில் சுப்ரமணியர் திருத்தேர் வெள்ளோட்டம்
ADDED : பிப் 01, 2025 12:47 AM
தி.கோட்டில் சுப்ரமணியர் திருத்தேர் வெள்ளோட்டம்
திருச்செங்கோடு:திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், வைகாசி விசாக தேர் திருவிழாவின் போது, நகர்வலம் வரும் சுப்பிரமணியர் தேர், 58 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக வடிவமைக்கப்பட்டது.
இதன் வெள்ளோட்ட நிகழ்ச்சி, நேற்று நடந்தது. நாமக்கல் மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில், எம்.எல்.ஏ., ஈஸ்வரன், கலெக்டர் உமா, திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினிசுரேஷ்பாபு, அறங்காவலர் குழு தலைவர் நல்லமுத்து ஆகியோர் வடம் பிடித்து, திருத்தேர் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தனர்.
தேர்நிலை அருகே இருந்து தொடங்கிய நிகழ்ச்சியில், காவல் தெய்வங்களுக்கு முதலில் பூஜை செய்யப்பட்டு, பக்தர்கள் நான்கு ரதவீதிகளில் வடம் பிடித்து இழுத்து வந்து நிலை சேர்த்தனர். திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி, தாசில்தார் விஜயகாந்த், அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ரமணிகாந்தன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.