/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாமியார் மண்டையைஉடைத்த டிரைவர் கைது
/
மாமியார் மண்டையைஉடைத்த டிரைவர் கைது
ADDED : மார் 03, 2025 01:34 AM
மாமியார் மண்டையைஉடைத்த டிரைவர் கைது
புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் அருகே, ஏழுரை சேர்ந்தவர் சரத்குமார், 28; டிரைவர். இவர், அதே பகுதியை சேர்ந்த சவுமியா, 26, என்ற பெண்ணை திருமணம் செய்தார். சில தினங்களுக்கு முன், கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, சவுமியா தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், நேற்று மாமியார் வீட்டிற்கு சென்ற சரத்குமார், மனைவி சவுமியாவை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அப்போது, மாமியார் செல்விக்கும், சரத்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சரத்குமார், அருகில் கிடந்த இரும்பு ராடால், செல்வியின் மண்டையை உடைத்தார். அவர் கொடுத்த புகார்படி, புதுச்சத்திரம் போலீசார், சரத்குமாரை கைது செய்தனர்.