/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வேளாண் கல்லுாரி மாணவர்கள்விவசாயிகளுடன் கலந்துரையாடல்
/
வேளாண் கல்லுாரி மாணவர்கள்விவசாயிகளுடன் கலந்துரையாடல்
வேளாண் கல்லுாரி மாணவர்கள்விவசாயிகளுடன் கலந்துரையாடல்
வேளாண் கல்லுாரி மாணவர்கள்விவசாயிகளுடன் கலந்துரையாடல்
ADDED : மார் 06, 2025 01:43 AM
வேளாண் கல்லுாரி மாணவர்கள்விவசாயிகளுடன் கலந்துரையாடல்
எலச்சிபாளையம்:எலச்சிபாளையம், அகரம் கிராமத்திற்குட்பட்ட விவசாய நிலங்களில், நேற்று, நாமக்கல் தனியார் வேளாண்மை கல்லுாரி மாணவர்கள், கிராம அனுபவ பயிற்சிக்காக விவசாயிகளிடம் கலந்துரையாடினர். மேலும், அந்த ஊரில் பயிரிடப்படும் பயிர்கள், மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.
இதில், செண்டுமல்லி பயிரிட்ட பெண் விவசாயியிடம், பயிரிடும் முறை, ரகம், களை மேலாண்மை, பூச்சி, நோய் கட்டுப்பாட்டு முறை, அறுவடை, சந்தை விலை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டறிந்தனர். இதேபோல், பருத்தி விவசாயி மாரியப்பனிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து, விவசாயிகளிடம், எதிர்ப்பு திறன் உள்ள ரகம், இயற்கை முறையில் பூச்சி, நோய் கட்டுப்படுத்தும் முறை, மேலாண்மை முறைகள் குறித்து மாணவர்கள் பரிந்துரைத்தனர்.