/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஒப்பந்த தொழிலாளர்காத்திருப்பு போராட்டம்
/
ஒப்பந்த தொழிலாளர்காத்திருப்பு போராட்டம்
ADDED : மார் 08, 2025 01:27 AM
ஒப்பந்த தொழிலாளர்காத்திருப்பு போராட்டம்
நாமக்கல்:பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பினர், நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் செயல்படும், மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். அதில், உழைக்கும் தொழிலாளியின் ஊதியத்தை உழைப்பவருக்கே வழங்க வேண்டும்.
தினக்கூலி அடிப்படையில் அரசே நேரடியாக பணியமர்த்தல் வேண்டும். தொடர்ந்து, 5வது நாளாக போராட்டம் நடத்தியும் தேர்தல் வாக்குறுதி சம்பந்தமாக அரசு எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.