ADDED : மார் 10, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டவிரோதமாகமது விற்றவர் கைது
குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, கல்லங்காட்டுவலசு, வீ.மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 52; விவசாயி. இவர், சட்டத்துக்கு விரோதமாக, வீட்டில் அரசு மது பானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார், சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனையிட்டனர். அப்போது, மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், செல்வராஜை கைது செய்தனர்.