/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காளியம்மன் கோவிலில்ஊஞ்சல் உற்சவ விழா
/
காளியம்மன் கோவிலில்ஊஞ்சல் உற்சவ விழா
ADDED : மார் 10, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காளியம்மன் கோவிலில்ஊஞ்சல் உற்சவ விழா
குமாரபாளையம்:குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் மகா குண்டம் மற்றும் தேர் திருவிழா நிகழ்ச்சி, கடந்த, 5ல் நடந்தது. இதையடுத்து அம்மன் திருக்கல்யாணம், வண்டி வேடிக்கை, வாண வேடிக்கை, மஞ்சள் நீராட்டு, அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று, இறுதி நிகழ்ச்சியாக ஊஞ்சல் உற்சவ விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாக்குழு தலைவர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள்
பங்கேற்றனர்.