தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நகை, பணம் திருடியவர் கைது

நகை, பணம் திருடியவர் கைது

நகை, பணம் திருடியவர் கைது


ADDED : மார் 15, 2025 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2025 02:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நகை, பணம் திருடியவர் கைது

குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, கல்லங்காட்டுவலசு விவேகானந்தா கார்டன் பகுதியை சேர்ந்தவர் எலும்பு முறிவு டாக்டர் யுவராஜ், 42; இவரது வீட்டின் கதவை உடைத்து, கடந்த பிப்., 8ல் மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடி சென்றனர். குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

நேற்று காலை, காவேரி நகர் புதிய பாலம் செல்லும் வழியில், குமாரபாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு சந்தேகப்படும்படி பஸ்சுக்காக நின்றிருந்த நபரை அழைத்து விசாரணை செய்தனர்.

அதில், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த அருண்குமார், 32, என்பதும், டாக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த நபர்களில், இவரும் ஒருவர் என்பது தெரியவந்தது.

அருண்குமாரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us