/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அண்ணாமலை கைதை கண்டித்துமாவட்டத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
/
அண்ணாமலை கைதை கண்டித்துமாவட்டத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
அண்ணாமலை கைதை கண்டித்துமாவட்டத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
அண்ணாமலை கைதை கண்டித்துமாவட்டத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 18, 2025 01:37 AM
அண்ணாமலை கைதை கண்டித்துமாவட்டத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். இதையடுத்து போலீசார், அண்ணாமலையை கைது செய்தனர். இதை கண்டித்து, மாநிலம் முழுவதும், பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
அதன்படி, மாநகர பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், நாமக்கல் பூங்கா சாலையில் நடந்தது. தேசிய செயற்குழு உறுப்பினர் மனோகரன் தலைமை வகித்தார். 'டாஸ்மாக்கை மூட வேண்டும்; பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை உடனே விடுதலை செய்ய வேண்டும்' என, தமிழக அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, பா.ஜ.,வினர், 17 பேரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
* பள்ளிப்பாளையம் நகர, ஒன்றிய பா.ஜ., சார்பில், நேற்று மாலை பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நகர தலைவர் லோகேஸ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
* குமாரபாளையத்தில், நகர தலைவர் வாணி தலைமையில், பள்ளிப்பாளையம் பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
* திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை அருகே, நாமக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ., துணை தலைவர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 29 பேரை போலீசார் கைது செய்தனர்.
* ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில், மண்டல தலைவர் வேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 35க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
* சேந்தமங்கலத்தில், ஒன்றிய தலைவர் பாண்டியன் தலைமையில், 19 பேர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். புதுச்சத்திரத்தில், 19 பேர், எருமப்பட்டி பஸ் ஸ்டாண்டில் போராட்டத்தில் ஈடுபட்ட, 15 பேரை போலீசார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.