/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுார் அரிமா சங்கம்இலவச நிழற்கூடம் அமைப்பு
/
ப.வேலுார் அரிமா சங்கம்இலவச நிழற்கூடம் அமைப்பு
ADDED : மார் 20, 2025 01:37 AM
ப.வேலுார் அரிமா சங்கம்இலவச நிழற்கூடம் அமைப்பு
ப.வேலுார்:-ப.வேலுார் அருகே, வீரணாம்பாளையம் கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லை. வெயில், மழைக்காலங்களில், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனால், அப்பகுதியில் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, ப.வேலுார் அரிமா சங்கம் சார்பில், 1.10 லட்ம் ரூபாய் மதிப்பில், நிழற்கூடம் கட்டப்பட்டது.
பணிகள் முழுமையாக நிறைவடைந்ததால், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நேற்று நிழற்கூடம் திறக்கப்பட்டது. மேலும், சாலையோரம், 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. ப.வேலுார் அரிமா சங்க தலைவர் சிவக்குமார், செயலாளர்கள் சாமிநாதன், தேவராஜ், பொருளாளர் அரசகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.