/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 30, 2025 01:44 AM
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ராசிபுரம்:மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு, மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து, நாமக்கல் மாவட்டம் முழுவதும், தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், நேற்று நடந்தது. ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் தலைமை வகித்தார். நகர செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து, 'மத்திய அரசு 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு விடுவிக்க வேண்டிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும்' என, கோரி கோஷம் எழுப்பினர்.
இதேபோல், நாமக்கல் - மோகனுார் சாலை, பி.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, எம்.எல்.ஏ., ராமலிங்கம் தலைமை வகித்தார். மோகனுாரில், துணை மேயர் பூபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வெண்ணந்துாரில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் மாயவன் தலைமையிலும், திருச்செங்கோட்டில், ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

