/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிப்பாளையம் நகராட்சியில் நியமன உறுப்பினர் பதவியேற்பு
/
பள்ளிப்பாளையம் நகராட்சியில் நியமன உறுப்பினர் பதவியேற்பு
பள்ளிப்பாளையம் நகராட்சியில் நியமன உறுப்பினர் பதவியேற்பு
பள்ளிப்பாளையம் நகராட்சியில் நியமன உறுப்பினர் பதவியேற்பு
ADDED : நவ 28, 2025 01:30 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் நகராட்சியில், புதிய நியமன உறுப்பினராக மாற்றுத்திறனாளி கோபிநாத் பொற்றுப்பேற்று கொண்டார்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், நகராட்சியில் மாற்றுத்திறனாளியான ஒருவருக்கு நியமன உறுப்பினர் பதவி வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் நேற்று, பள்ளிப்பாளையம் நகராட்சியில் நியமன உறுப்பினராக மாற்றுத்திறனாளியான கோபிநாத் நியமிக்கப்பட்டார். அவரின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று பள்ளிப்பாளையம் நகராட்சி அலுவகத்தில் நடந்தது.
நகராட்சி கமிஷனர் தயாளன் நியமன உறுப்பினர் கோபிநாத்துக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் பாலமுருகன், பள்ளிப்பாளையம் நகர தி.மு.க., செயலாளர் குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
* நாமக்கல் மாநகராட்சி நியமன கவுன்சிலராக, கிழக்கு மாவட்ட தி.மு.க., அவைத்தலைவர் மணிமாறன் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் அவர் பதவியேற்று கொண்டார். மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, கமிஷனர் சிவகுமார், கவுன்சிலர்கள் நந்தகுமார்,
சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

