/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாம்ரூ.1.34 கோடியில் நலத்திட்டம் வழங்கல்
/
'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாம்ரூ.1.34 கோடியில் நலத்திட்டம் வழங்கல்
'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாம்ரூ.1.34 கோடியில் நலத்திட்டம் வழங்கல்
'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாம்ரூ.1.34 கோடியில் நலத்திட்டம் வழங்கல்
ADDED : பிப் 28, 2025 01:46 AM
'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாம்ரூ.1.34 கோடியில் நலத்திட்டம் வழங்கல்
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் நடந்த, 'மக்களுடன் முதல் வர்' மூன்றாம் கட்ட சிறப்பு முகாமில், அமைச்சர் மதி வேந்தன், பயனாளிகளுக்கு, 1.34 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், ரெட் டிப்பட்டி, காரைக்குறிச்சி, கட்டணாச்சம்பட்டி, தொட்டி வலசு மற்றும் முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று, 'மக்களுடன் முதல்வர்' மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங் கேற்றார்.
அவர், நாமக்கல் அடுத்த ரெட்டிப்பட்டி ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில், 36 பயனாளிகளுக்கு 49.68 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள், புதுச்சத்திரம் அடுத்த காரைக்குறிச்சி ஊராட்சி, செல் லாயிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 25 பயனாளிகளுக்கு, 8.62 லட்சம் ரூபாய் மதிப் பில் அரசு நலத்திட்ட உதவி கள், வெண்ணந்துார் ஊராட்சி ஒன்றியம், தொட்டியவலசு ஊராட்சி மன்ற அலுவலகத்தில், 20 பயனாளிகளுக்கு 19.63 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள், கட்டணாச்சம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில், 14 பயனாளிகளுக்கு, 10.68 லட் சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளுக்குறிச்சி அரசு உண்டி உறைவிட ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 11 பயனாளிகளுக்கு, 10.44 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங் கினார்.
மேலும், நவலடிப்பட்டி யில் 86 பேருக்கு, 15.70 லட்சம் ரூபாய், வீரகனுார் பட்டியில், 24 பேருக்கு, 4.80 லட்சம் ரூபாய், எம்.ராசாம் பாளையத்தில், 20 பேருக்கு, 2 லட்சம் ரூபாய் மற்றும் ராசாகவுண்டன்புதுாரில், 59 பேருக்கு, 11.80 லட்சம் ரூபாய் என, 189 பேருக்கு, 34.30 லட்சம் ரூபாய் சுழல் நிதி கடனுதவி என, மொத்தம், 295 பயனாளிகளுக்கு, ஒரு கோடியே, 34 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
எம்.எல்.ஏ., பொன்னு சாமி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபா கரன், ஆர்.டி.ஓ., பார்த்தீபன், நாமக்கல் மாநகராட்சி கமிஷ னர் மகேஸ்வரி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.