தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கற்கள் கடத்திய 2 பேர் கைது

கற்கள் கடத்திய 2 பேர் கைது

கற்கள் கடத்திய 2 பேர் கைது


ADDED : பிப் 20, 2025 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கற்கள் கடத்திய 2 பேர் கைது

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை பகுதியில், நேற்று நாமக்கல் சுங்கத்துறை உதவி அலுவலர் நந்தகுமார் மற்றும் ஊழியர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக, 10 சக்கர லாரியில் சார்னகைட் வகை கற்கள், ஆறு வெட்டி எடுத்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் கற்களை அனுமதியின்றி வெட்டி எடுத்து வந்தது தெரிந்தது.

இதையடுத்து, லாரி டிரைவரான ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம், வெடியன்காடு பகுதியை சேர்ந்த பழனி மகன் கண்ணன், 52, வாழப்பாடி காட்டுவேப்பிலைப்பட்டியை சேர்ந்த சண்முகம் மகன் சிவக்குமார், 28, லாரி உரிமையாளரான ஆயிபாளையத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் பிரகாஷ், 38, ஆகிய மூவர் மீதும் நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து கண்ணன், சிவக்குமாரை கைது செய்தனர்.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us