/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முதல்வர் ஸ்டாலின் வரும் 22ல் நாமக்கல் வருகை 15,000 பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார்
/
முதல்வர் ஸ்டாலின் வரும் 22ல் நாமக்கல் வருகை 15,000 பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார்
முதல்வர் ஸ்டாலின் வரும் 22ல் நாமக்கல் வருகை 15,000 பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார்
முதல்வர் ஸ்டாலின் வரும் 22ல் நாமக்கல் வருகை 15,000 பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார்
ADDED : அக் 20, 2024 01:49 AM
முதல்வர் ஸ்டாலின் வரும் 22ல் நாமக்கல் வருகை
15,000 பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார்
நாமக்கல், அக். 20-
''நாமக்கல்லில் வரும், 22ல் நடக்கும் அரசு விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின், 15,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் கூறினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், வரும், 22ல் நாமக்கல் வருகிறார். இதையொட்டி, விழா முன்னேற்பாட்டு பணிகளை, எம்.பி.,ராஜேஸ்குமார் ஆய்வு செய்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும், 22 காலை, 11:30 மணிக்கு சேலம் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் முதல்வர் ஸ்டாலின், மதியம், 12:30 மணிக்கு நாமக்கல் வருகிறார். தொடர்ந்து, நாமக்கல்-பரமத்தி சாலையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.
மாலை, 3:00 மணிக்கு, பொம்மைக்குட்டை மேட்டில் நடக்கும் அரசு விழாவில், பழங்குடியின பயனாளிகளுக்கு கறவைமாடுகளை வழங்குகிறார். மகளிர் சுய உதவிக்குழு மூலம் 'பிளை ஆஷ்' செங்கல் தயாரிக்கும் தொழிற்கூடத்தை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைக்கிறார்.
நாமக்கல் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், 15,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கி, விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.
தமிழக முதல்வர் நாமக்கல் வருகையை முன்னிட்டு, அவருக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் வரலாறு காணாத வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இன்று சேலத்தில் நடக்கும் அரசு விழாவில் கலந்துகொள்ளும் துணை முதலமைச்சர் உதயநிதி, மாலை, 3:00 மணிக்கு, சேலத்தில் இருந்து கார் மூலம், நாமக்கல் வழியாக திண்டுக்கல் செல்கிறார். அவருக்கு புதுச்சத்திரம் அருகில், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல் கலெக்டர் உமா, எம்.எல்.ஏ., ராமலிங்கம், எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி உள்பட பலர் உடனிருந்தனர்.