/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வழித்தட ஆக்கிரமிப்பு அகற்ற காந்தி சிலைக்கு மனு மாலை
/
வழித்தட ஆக்கிரமிப்பு அகற்ற காந்தி சிலைக்கு மனு மாலை
வழித்தட ஆக்கிரமிப்பு அகற்ற காந்தி சிலைக்கு மனு மாலை
வழித்தட ஆக்கிரமிப்பு அகற்ற காந்தி சிலைக்கு மனு மாலை
ADDED : பிப் 25, 2025 04:40 AM
நாமக்கல்: நாமக்கல் அடுத்த என்.புதுப்பட்டி ஊராட்சி, மேலப்பட்டியை சேர்ந்தவர் பழனிவேலு, 45. இவர், நேற்று காலை, நாமக்கல் செலம்பக்கவுண்டர் பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு கோரிக்கை மனுக்களை மாலையாக கோர்த்து அணிவித்தார்.
தொடர்ந்து, அங்கிருந்து அவரும் மனுக்களை மாலையாக அணிந்து கொண்டு, 7 கி.மீ., துாரமுள்ள கலெக்டர் அலுவலகத்-திற்கு நடந்து சென்றார். பின், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீக்கும் நாள் கூட்டத்தில், அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை அளித்தார். அதில், 'அரசுக்கு சொந்தமான வழித்தட பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதை மீட்க கோரி, அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்-கையும் இல்லை. இகுறித்து மாவட்ட கலெக்டர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்திருந்தார். இதனால் சிறிது நேரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.