தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு அபிஷேகம்

தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு அபிஷேகம்

தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு அபிஷேகம்


ADDED : பிப் 03, 2024 03:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2024 03:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: நாமக்கல் தட்டாரத்தெரு, காமாட்சியம்மன் உடனமர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள அக்னி காலபைரவருக்கு, தேய்பிறை அஷ்டமி விழா, நேற்று சிறப்பாக கொண்டாடப்

பட்டது.

அந்த வகையில், தை மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி, நேற்று மாலை, 5:00 மணிக்கு அக்னி கால பைரவருக்கும், உற்சவ மூர்த்திக்கும் மஞ்சள், கும்குமம், தேன், பால், தயிர், இளநீர், பன்னீர்,

சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, சுவாமிக்கு ஏலக்காய், திராட்சை மற்றும் அதிரச மாலை அணிவித்து, சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் திருவாசகம் பாடியும், தேங்காய், எலுமிச்சை, பூசணி ஆகியவற்றில் நெய் தீபம் ஏற்றியும் நேர்த்திக்கடன்

செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us