/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மலைபோல் குவிந்துள்ள குப்பைக்கழிவு
/
மலைபோல் குவிந்துள்ள குப்பைக்கழிவு
ADDED : மார் 03, 2025 01:32 AM
மலைபோல் குவிந்துள்ள குப்பைக்கழிவு
பள்ளிப்பாளையம்:
பள்ளிப்பாளையம் அருகே, தாஜ்நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, வாகனத்தில் கொண்டு வந்து குப்பைக்கழிவுகளை கொட்டி குவித்துவிட்டு சென்றுள்ளனர்.
நேற்று காலை, குப்பைக்கழிவை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மலைபோல் குவிந்துள்ள குப்பைக்கழிவால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதில் அப்பகுதி தெருநாய்கள் புகுந்து கிளறி விடுவதால், பரவி கிடக்கிறது. இதுகுறித்து பள்ளிப்பாளையம் யூனியன், பி.டி.ஓ.,விடம் புகார் தெரிவித்துள்ளனர். குப்பைக்கழிவை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.