/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி
/
நாமக்கல்லில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி
நாமக்கல்லில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி
நாமக்கல்லில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி
ADDED : மார் 21, 2025 01:31 AM
நாமக்கல்லில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி
நாமக்கல்:நாமக்கல்லில், மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நேற்று நடைபெற்றது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் தமிழக காலநிலை மாற்றத்துறை, மாவட்ட தேசிய பசுமைப்படை, 'லா' தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, 6 முதல் 8ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ, மாணவியர்களின் படைப்புகளை கொண்டு மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் கண்காட்சி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். 60 அரசு பள்ளிகள் கலந்து கொண்டன.
மாணவர்கள் இருவர் வீதம் குழுக்களாக பிரிந்து, தங்களது படைப்புகளை உருவாக்கி காட்சிப்படுத்தினர். கம்பு, தினை போன்ற ஆரோக்கிய உணவுகள், ஆற்றல் சேமிப்பு அளவீடு
கள், கழிவிலிருந்து தோட்டம் அமைத்தல், நீர் பாதுகாப்பு, பசுமை வாழ்க்கை முறை, மாசுபாடுகளை களைதல் போன்ற கருத்துகளை மையப்படுத்தி மாணவர்கள் தங்களது படைப்புகளை வைத்திருந்தனர்.
சிறந்த படைப்புகளை காட்சிப்படுத்திய பள்ளிகளுக்கு முதல் பரிசாக, 10,000 ரூபாய்,- இரண்டாம் பரிசாக, 8,000 ரூபாய்,- மூன்றாம் பரிசாக, 7,000- ரூபாய் மற்றும் சிறப்பு பரிசுகளாக, 5,000- ரூபாய் வீதம் இரண்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து பள்ளிகளுக்கும் ஆறுதல் பரிசாக, 1,000- ரூபாய் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் கண்காட்சியை பார்வையிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தகவல்களை கண்டு பயனடைந்தனர். ஏற்பாடுகளை, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வேங்கடேசன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜூ ஆகியோர் செய்திருந்தனர்.