தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கலைத்திருவிழாவில் பங்கேற்கும்கலைக்குழுவினர் நிகழ்ச்சி துவக்கம்

கலைத்திருவிழாவில் பங்கேற்கும்கலைக்குழுவினர் நிகழ்ச்சி துவக்கம்

கலைத்திருவிழாவில் பங்கேற்கும்கலைக்குழுவினர் நிகழ்ச்சி துவக்கம்


ADDED : மார் 23, 2025 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2025 01:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கலைத்திருவிழாவில் பங்கேற்கும்கலைக்குழுவினர் நிகழ்ச்சி துவக்கம்

நாமக்கல்:கலைத்திருவிழாவில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுவினருக்கான நிகழ்ச்சி பதிவு, நாமக்கல்லில் நேற்று துவங்கியது.

தமிழக அரசு, கலை பண்பாட்டுத் துறை சார்பில், சென்னையில் பொங்கல் விழாவின்போது, தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில், 'சென்னை- நம்ம ஊரு திருவிழா' என, 18 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. 2024ல், கோவை, தஞ்சை, வேலுார், சேலம், நெல்லை, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய எட்டு இடங்களில் 'நம்ம ஊரு திருவிழா' நடத்தப்பட்டது.

அதேபோல், நடப்பு ஆண்டும், மேற்கண்ட எட்டு இடங்களில், கலை திருவிழா நடத்தப்படுகிறது. அதில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்களுக்களின் நிகழ்ச்சி பதிவு, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், நேற்று தொடங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், நேற்று தொடங்கியது. ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் தில்லைசிவக்குமார், ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். தொடர்ந்து நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்பை கைச்சிலம்பாட்டம், இறை நடனம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டது.

ஜவகர் சிறுவர் மன்ற கலை ஆசிரியர்கள் சரவணன், பாண்டியராஜன், வினோத்குமார், பிரவீன் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us