/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா
/
அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா
ADDED : மார் 26, 2025 01:53 AM
அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா
குமாரபாளையம்:குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், தமிழ்த்துறை சார்பில், 'தமிழ் இலக்கியங்களில் பெண்கள்' எனும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம், செஞ்சுருள் சங்கம், செஞ்சிலுவை சங்கம் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம், இலக்கிய மன்ற நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். பன்னாட்டு கருத்தரங்கில், ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதற்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இலக்கிய மன்ற நிறைவு விழாவில், மாணவ, மாணவியர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில், 'போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க பாடுபட வேண்டும்' என, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.