ADDED : ஏப் 04, 2025 12:58 AM
குழந்தை பெற்ற பெண் பலி
பள்ளிப்பாளையம்:வெப்படையில், குழந்தை பெற்ற பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண் இறந்து விட்டார். ஈரோடு காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
பீகாரை சேர்ந்தவர் கஞ்சன்தேவி, 35, இவரது கணவர் முகேஸ். இருவரும் வெப்படையில் தனியார் நுாற்பாலையில் வேலை செய்கின்றனர். அருகிலேயே வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். கர்ப்பிணியாக இருந்த கஞ்சன்தேவிக்கு கடந்த, 1ம்தேதி வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கஞ்சன்தேவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால், ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இது குறித்து வெப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குழந்தையை பார்க்க ஆளில்லாததால், ஈரோடு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
***********************

