ADDED : ஜூலை 13, 2026 06:00 AM
ராசிபுரம்:ராசிபுரம்
டி.வி.எஸ்., சாலை பகுதியில் பல்வேறு தனியார் மருத்துவமனைகள்
அமைந்துள்ளன. இந்த மருத்துவமனைக்கு செல்லும் முதியவர்கள், பெண்கள்
மற்றும் சிறுவர்கள் என, பலரையும் இப்பகுதியில் சுற்றித்திரியும்
தெருநாய்கள் தொடர்ந்து துரத்தி கடித்து வருகின்றன.
இதுதொடர்பாக
மருத்துவமனை நிர்வாகம் சார்பில், நகராட்சியில் பலமுறை மனு
அளித்தும், நகராட்சி நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும்
மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.ராசிபுரம் நகர பகுதியில் ஒரு
பக்கம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடும் பணிகள்
நடந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் மருத்துவமனைக்கு செல்லும்
முதியவரை தெருநாய் துரத்தி கடிக்கும் அதிர்ச்சியூட்டும், 'சிசிடிவி'
காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நகராட்சி
நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு
பாதுகாப்பு வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
