ADDED : ஜூலை 25, 2026 05:43 AM
நாமக்கல்:இந்தியப்பள்ளி
ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், மாநிலம் முழுவதும் கண்டன
ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல்லில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
கலைச்செல்வன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் குணசேகரன் வரவேற்றார்.
மாவட்ட தலைவர் மாதேஸ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில சட்ட ஆலோசகர்
பாலகிருஷ்ணன், கோரிக்கை குறித்து விளக்கினார்.தேசிய
கல்விக்கொள்கை, 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும். 'நீட்' தேர்வு
வினாத்தாள் கசிவு, சி.பி.எஸ்.இ., விடைத்தாள் மதிப்பீட்டு
முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக
வேண்டும். லோக்சபா நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் மீதான தாக்குதலை
வன்மையாக கண்டிக்கிறோம். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில்
ஈடுபடும் அனைத்து ஆசிரியர், அலுவலர்களுக்கும் அரசு சார்பில்
காப்பீடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள்
வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
