கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 25, 2026 05:49 AM
நாமக்கல்:வருவாய்த்துறை
சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி,
பெருந்திரள் முறையீடு போராட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்
நடந்தது.
அதில், அரசால் அங்கீகரிக்கப்படாத, 'தீர்வு' ஆப்பில்
அனைத்து அலுவலர்களையும் பணிபுரிய வற்புறுத்துவதை தவிர்த்து,
ஆப்பை முற்றிலுமாக கைவிட வேண்டும். நாமக்கல் மாவட்ட நிர்வாகம், ஒரு
சிலருக்கு மட்டும் சாதகமாக பணிமாறுதல் வழங்கியதை தவிர்த்து,
பெரும்பான்யைமாக உள்ளவர்களின் நியாயமான கோரிக்கைகளை கேட்டு,
மாவட்ட நிர்வாகத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். அலுவலக
நேரம் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும் ஆய்வு கூட்டங்கள்,
தணிக்கை உள்ளிட்ட பணிகளை செய்ய உயர் அலுவலர்கள் வற்புறுத்துவதை
தவிர்க்க வேண்டும். இணைய வழி சான்றிதழ், பட்டா மாறுதல், அனைத்து விதமான
மக்களின் கோரிக்கை மனுக்கள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள, உரிய
கால அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை
வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.தொடர்ந்து, கலெக்டர் அலுவலக நுழைவு
வாயில் முன் அமர்ந்து கோஷம் எழுப்பினர். டி.ஆர்.ஓ., சரவணன்,
பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, தர்ணா போராட்டத்தை கைவிட்டு
கலைந்து சென்றனர். 'எங்களின் கோரிக்கை மீது நடவடிக்கை
எடுக்காதபட்சத்தில், அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்' என,
ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
