ADDED : ஜூலை 25, 2026 05:49 AM
நாமக்கல்:மாணவர்களின்
திறமைகளை வெளிக்கொண்டுவர, 2026-27ம் கல்வியாண்டிற்கான
கலைத்திருவிழா போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது. 'இளையோர் திறன்' என்ற
மையக்கருத்தை முன்னிறுத்தி, பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும்
மாநிலம் என, ஐந்து நிலைகளில் இப்போட்டி நடத்தப்படுகிறது.
பள்ளி
அளவிலான போட்டிகளில், மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடனும்,
ஆர்வத்துடனும் கலந்து கொண்டு, செவ்வியல் இசை, நாட்டுப்புற பாடல்,
ஓவியம் வரைதல், மணல் சிற்பம், புள்ளிக்கோலம் உள்ளிட்ட பல்வேறு கலை
போட்டிகளில், தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
தலைமையாசிரியர் சீனிவாச ராகவன் தலைமை வகித்தார். அனைத்து
ஆசிரியர்களும், ஒவ்வொரு போட்டிக்கும் பொறுப்பாளர்களாக
நியமிக்கப்பட்டு, தங்களது வழிகாட்டுதலின் கீழ் போட்டிகளை
சிறப்பாக நடத்தினர்.
முதல் கட்டமாக நடந்த இப்போட்டிகளில்
பங்கேற்ற மாணவர்களின் திறமைகள் மதிப்பீடு செய்யப்பட்டு,
அடுத்தகட்ட போட்டிகளுக்கு தகுதியான மாணவர்களின் தேர்வு பட்டியல்
தயாரிக்கப்பட்டுள்ளது.
