/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஏரியில் மருத்துவ கழிவுரூ.25,000 அபராதம் விதிப்பு
/
ஏரியில் மருத்துவ கழிவுரூ.25,000 அபராதம் விதிப்பு
ADDED : பிப் 09, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏரியில் மருத்துவ கழிவுரூ.25,000 அபராதம் விதிப்பு
ராசிபுரம்:ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில், ராசிபுரம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில், நேற்று முன்தினம், காய்ந்த முள் மரங்கள், கோரைப்புல்லில் தீ பற்றியது. அப்போது தீயை அணைக்க உள்ளே சென்றபோது, ஏரியில் காலாவதியான மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. ராசிபுரம் தாசில்தார், மருத்துவ கழிவுகளை ஆய்வு செய்தார். விசாரணையில், ராசிபுரம் பெரிய கடைவீதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், மருத்துவ கழிவுகளை கொட்டியது தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமாருக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

