/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வீடுகளில் புகுந்து நகை திருடிய3 பேர் சிக்கினர்: 11 பவுன் பறிமுதல்
/
வீடுகளில் புகுந்து நகை திருடிய3 பேர் சிக்கினர்: 11 பவுன் பறிமுதல்
வீடுகளில் புகுந்து நகை திருடிய3 பேர் சிக்கினர்: 11 பவுன் பறிமுதல்
வீடுகளில் புகுந்து நகை திருடிய3 பேர் சிக்கினர்: 11 பவுன் பறிமுதல்
ADDED : ஏப் 01, 2025 01:55 AM
வீடுகளில் புகுந்து நகை திருடிய3 பேர் சிக்கினர்: 11 பவுன் பறிமுதல்
நாமக்கல்:சேந்தமங்கலம், புதுச்சத்திரம், நல்லிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் புகுந்து நகை திருடிய, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் அடுத்த மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ், 30; இவர் பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் புணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன், இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், 6.25 பவுன் நகையை திருடி சென்றனர். இதுகுறித்து புகார்படி, சேந்தமங்கலம் போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில், திருட்டில் ஈடுபட்டது, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை சேர்ந்த கார்த்திகேயன், 28, ரமேஷ், 37, தேவரஹள்ளியை சேர்ந்த குமரேசன், 28, என்பது தெரியவந்தது.
இதையடுத்து, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் உத்தரவுப்படி, எஸ்.ஐ., மதன் தலைமையிலான தனிப்படை போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சேந்தமங்கலம், புதுச்சத்திரம், நல்லிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் புகுந்த நகை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவல்படி, 11 பவுன் நகைகளை மீட்டனர். இதில், ரமேஷூக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்திருப்பதால், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.