/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஊர்வலம் நடத்திய வி.சி.க.,நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு
/
ஊர்வலம் நடத்திய வி.சி.க.,நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு
ஊர்வலம் நடத்திய வி.சி.க.,நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு
ஊர்வலம் நடத்திய வி.சி.க.,நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 16, 2025 01:19 AM
ஊர்வலம் நடத்திய வி.சி.க.,நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு
நாமகிரிப்பேட்டை:ராசிபுரத்தில், நேற்று முன்தினம், நாமக்கல் கிழக்கு மாவட்ட வி.சி.க., சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, நிர்வாகிகள் அமைதி பேரணி நடத்தினர். ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக ஆர்.புதுப்பாளையம் சாலையில், மாவட்ட செயலாளர் அர்ஜுன் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்தனர்.
பின், கிழக்கு தெருவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். அப்போது, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து அம்பேத்கர் சிலை வரை, சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், ஊர்வலத்திற்கும் முறையாக அனுமதி பெறவில்லை.
இதையடுத்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, ராசிபுரம் போலீசார், வி.சி.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அர்ஜுன், காசிராஜன், இமயவரம்பன், நற்குமரன், பழனிசாமி, புஷ்பராஜ் உள்ளிட்ட, ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.